இறுதி உரை

 இறுதி உரை

81

இறுதி உரை

இறுதி உரை

நண்பர்கள் மூவரும் உடன்பட்டதற்கினங்க விடுதிவாயலில் சந்தித்து கொண்டனர். றாஷித் அவ்விருவரையிம் “நூறு பேர்” என்ற புத்தகம் இருக்கக்கூடிய வாசிகசாலைக்கு அழைத்துச்சென்றார். மைக்கல் நூல்களை வாசித்தவராக புத்தக இறாக்கையருகே நின்றுகொடிருந்தபோது தீடிரென ஏதோவொன்றை பார்த்தவராக றாஷிதை நோக்கி.

றாஷித்! இதோ இந்த தகவலை பாருங்கள். இஸ்ரேலிய நூலகமொன்றில் குர்ஆனின் பழமையான கையேடு கண்டுபிடிப்பு. இன்று இதைப்பற்றி உரையாடலாம்.

றாஷித்: இந்தக்கையேடு எப்படி இஸ்ரேலிய நூலகத்திற்கு வந்ததெனக் கேற்கிறீர்களா? இச்செய்தியை இனையதளத்தில் நேற்றே வாசித்துவிட்டேன். அந்தக்கையேடு கூட்டணிப்படை யுத்தத்தின்பின்னர் ஈராக்கிலிருந்து திருடப்பட்டது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்கல்: இல்லை இல்லை, நான் அதை நாடவில்லை. மாறாக குர்ஆனின் மூலப்பிரதி உங்கள் கைவசமே இருக்கிறது. இது குர்ஆனின் நம்பகத்தன்மையை எடுத்துகாட்டுகிறது. இச்செய்தி; அக்கையேடு சுமார் 1200 வருடங்களுக்கு முன், அதாவது மூலப்பிரதி தொகுக்கப்பட்டு 200 வருடங்களின் பின் எழுதப்பட்டது என தெரிவிக்கிறது. உன்மையில் திகிழான செய்திதான்.

றாஷித்: ஆரம்பமாக... இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகளில் அது மிகப்பழமை வாய்ந்ததல்ல. ரஷ்யர்கள் மிகப்பழமையான அல்குர்ஆன் பிரிதி அவர்களுடைய அருட்காட்சியத்திலுள்ளாத கூறுகிறார்கள். ரஷ்ய ஆய்வாளர் யபிம் ரிழ்வான் அவர்களிடமுள்ள குர்ஆன் பிரதிகளாவன கி.பி 8ஆம் ,9ஆம் நூண்றான்டுகளுக்குரியவை என உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் எகிப்தியர்கள் கெய்ரோவிலுள்ள அல்ஹூஸைன் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் பிரதியே மிகப்பழமையானது எனக்கூறுகின்றனர். உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்தில் எழுதப்பட்ட குர்ஆன்களில் ஒன்றான அப்பிரதி சுமார் 1400 வருடங்கள் பழமைவாந்தது.

1972 ஆம் ஆன்டு ஸன்ஆ பல்கலைக்கழகம் புணர்நிர்மான பணியின் போது கண்டுடெடுக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதி இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களுடைய காலத்திற்குரியது என யமனியர்கள் கூறுகிறார்கள்.

இவையனைத்தும் சரியாகஇருக்கலாம். ஏனென்றால் அல்குர்ஆன் பிரதிகள் எழுதப்பட்டு உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பட்டன.

இரண்டாவதாக... இன்று முஸ்களின் கையில் தவழக்கூடிய அல்குர்ஆன் நபியவர்களின் காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதேபோன்று எவ்வித திரிவுமின்றி காணப்படுகிறதென்பது கீழேத்தேயவாதிகளாலும் மார்க்க அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். எனினும் வரலாறு ரீதியாக உறுதிபடுத்தப்படாத பரிசுத்தவேதாகமத்தை நம்பக்கூடியவர்கள் அல்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதநூல் என்பதை ஏற்கமறுக்கிறார்கள்.

ப்ரான்ஸை சேர்ந்த சமூகவியலாளரும் கீழேத்தயவாதியிமான என்ஸ் ரீனன் குறிப்பிடுகையில் ((குர்ஆனில் எவ்வித திரிபோ, மாற்றமோ, நிகழ்ந்திருக்க இடமில்லை.)) எனக்குறிப்பிட்டார்.

தற்போது நாங்கள் கொள்வனவு செய்வதற்காக வந்த நூலின் ஆசிரியர் மைக்கல் எச் ஹாட் குறிப்பிடுகையில்: ((வேதநூட்களில் முஹம்மதுக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆனை தவிர எந்தவொன்றும் பரிபூரண வடிவில் இல்லை.)) ஆனால் ஜேர்மனிய கவிஞர் கொத் சற்று அதையிம் தாண்டி குறிப்பிட்டுள்ளதாவது ((அல் குர்ஆனே நூட்களில் மிக உன்னதமான நூலாகும்; முஸ்லீம்கள் நம்புவதை போன்றே நானும் அதை நம்புகிறேன்” அவர் எழுவதை வயதை அடைந்தபோது முஹம்மத் நபி ஸல் அவர்களுக்கு அல்குர்ஆன் இரக்கியருளப்பட்ட கண்ணியமான இரவை பயபக்தியுடன் களிக்கப்போவாத பகிரங்கமாக அறிவித்தார்.

ரஜீவ்: ஆம், இன்று எங்களுடைய தலைப்பு இதுதான்: அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட இறைசெய்தியா?. இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட மார்க்கமா?

றாஷித்: அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது மட்டுமல்ல; ஒரேயொரு சரியான மார்க்கமும் அதுவே.!

மைக்கல்: எங்களின் சப்தம் நூலக வாடிக்கையாளர்களுக்கு இடைஞ்சலளிக்கு மல்லவா வாருங்கள் சற்று ஓரமாக செல்வோம்.

ரஜீவ் (றாஷிதை நோக்கி): இருக்கலாம் , ஆனால் எப்படி நம்புவது?!

றாஷித்: நேரத்திற்கேற்ப சுருக்கிக் கொள்கிறேன்; அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை, முஹம்மதின் வார்த்தையன்று. மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட அல்லாஹ்வின் அறிவை பிரதிபழிக்கக்கூடிய அதன் அற்புத பக்கங்கள் சிலதை தெளிவுபடுத்துகிறேன்:.

மைக்கல்: நாங்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அறிவியல் மற்றும் சிந்தனை ரீதியாக விள்க்குங்கள்.

றாஷித்: தேவாலயங்களை பின்பற்றுபவர்கள் வேதநூட்களை பரிசுத்த வேதாகம் என்பர். பரிசுத்தமான, உன்மையான கடவுள் எவ்வாறு குறைகளைவிட்டும் முழுமையான முறையில் பரிசுத்தமாக இருக்க வேண்டுமோ, அவ்வாறே வேதநூட்களும் குறைகள், தவறுகளை விட்டும் தூய்மையாக இருக்க வேண்டும். வேதாகமம் அறிவியலை எதிர்த்ததன் விளைவால் அறிஞர்களுக்கும் திருச்சபைக்கும் மத்தியில் மூண்ட யுத்தத்தைபற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆயினும் இது சம்பந்தமாக குர்ஆனுடைய அறைகூவலை நோக்கவோம்.

சமகாலத்து இஸ்லாமிய அறிஞரான அப்துல் மஜீத் சந்தானி சிசு உருவாக்கத்தின் விந்தனுதொடக்கமுள்ள முதற் கட்டங்கள், இரு விந்தனுக்களின் சேர்க்கையினால் உருவாகும் மனிதப்படைப்பு, சிசு உருவாக்கம் தொடக்கம் குழந்தையாக வெளியாகும் கட்டங்கள் முதலியவற்றை விளக்கங்கூடிய திருமறை வசனங்கள் தொடர்பாக அமெரிக்காவின் நொரிஸ் வெஸ்டன் பல்கலைக்கழக பிரசவவியல் நோய்கள் தொடர்பான போராசியர் ஸெம்ஸன் உடன் உரையாற்றினார். இதன்போது ஒரு மனிதப் பிறவி விந்தனுவாக இருக்கும்போது அதன் அனைத்து கட்டங்களும் நிர்னயிக்கபடுகின்றன என்பதை உறுதிபடுத்தினார். விஞ்ஞான உண்மை அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாவது {எப்பொருளிருந்தும் அல்லாஹ் அவனை படைத்தான் (என்று சிந்தித்தானா) ஒரு துளி இந்திரியத்திளிருந்து அவனை படைத்தான். பின்னர், அவனுக்குரிய அனைத்தையிம் அவன் நிர்னயித்தான்} [ஸூரா அபஸ:வசனம் 17,19] இவ்விளக்கங்களை அப்பேராசியர் செவிமடுத்தபின் ஒரு மானாட்டில் இது தொடர்பாக அவருடைய கருத்தை இவ்வாறு தெரிவித்தார்: “நாங்கள் ஆய்வு செய்யக்கூடிய அனைத்தையும் அல்குர்ஆன் பல நூற்றான்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தியுள்ளது. அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இது வொரு சான்றாகும்.

சற்று பொருங்கள்! எனது மடிக் கணனியில் உள்ள மேலும் சில ஆதாரங்களை வாசித்து காட்டுகிறேன்: எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக அறிவியல் பெட்டகம் என வர்ணிக்கப்படும் ( the human developing) என்ற நூலின் ஆசிரியர், பேராசியர் இச்மோர் ஒரு மாநாட்டில் கூறியதாவது: “குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிசு உருவாக்க முறைகள் தொடர்பான உண்மைகள் ஏழாம் நூறான்டு விஞ்ஞான முறைக்கு அப்பாற்பட்டவை.

முஹம்மத் எழுதப்படிக்கத் தெரியாத சாதாரன மனிதர். ஆகையால் இவற்றை விஞ்ஞான ஆய்வின் ஊடாக அறிநதிருக்க வாய்ப்பில்லை. எனவே இவை அனைத்தும் இறைவனிடமிருந்து அவர் பெற்ற வஹியாகும்.” பேராசிரியர் இச்மோர் அதோடு நின்று விடவில்லை மாறாக அவரின் நூலின் ஒவ்வொரு பகுதியிலும் சிசு தொடர்பான அறிவியல் உண்மைகளை பேசக்கூடிய அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களை இனைத்துள்ளார்.

டோக்யோ:“குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என ஏற்றுக்கொள்வதில் எந்த சங்கடமுமில்லை. அதிலுள்ள சிசு உருவாக்கம் தொடர்பாக கூறப்ட்டுள்ள விஞ்ஞான உண்மைகள் ஏழாம் நூற்றான்டின் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை.” என்ன.. இது போதுமா?!

ரஜீவ்: அல்குர்ஆனில் வேறு ஏதாவது துறைகள்பற்றியும் கூறப்பட்டுள்ளதா?

றாஷித்: ஆம், என்னிலடாங்காத துறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. நவீன விஞ்ஞானத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சில வரலாற்று உன்மைகளையும் பற்றி கூறுகிறது. எடுத்துக்காட்டாக: மூஸா (அலை) பரோவா மன்னர் (பிர்அவ்ன்) ஆகியோருடைய சம்பவத்தை எடுத்துகொள்வோம். ப்ரோவா மன்னர் மூழ்கி இறந்ததாகவும் அவருடைய பிரேதம் பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு ஓர் அத்தாட்சியாக பாதுகாக்கப்படும் எனவும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. {இன்றைய தினம் உன்னை உனது பிரேதத்துடன் பின்னால் வரக்கூடியவர்களுக்கு பாதுகாப்போம்} [யூனுஸ்:92] இதில் மூன்று விடயங்கள் உள்ளன.

01.பரோவா மூழ்கி இறந்தான்.

02. தண்ணீரில் உக்கிப்போகாமல் அவனது பிரேதத்தை பாதுகாத்தல்.

03.பின்னர் வரக்கூடிய சந்த்தியினருக்கு ஓர் அத்தாட்சியாக பாதுகாத்தல்.

இன்றைய விஞ்ஞானம் உறுதிபடுத்தியுள்ளது நபி ஸல் மரணித்து சுமாராக 1200 வருடங்களின் பின்னர் கி.பி.1898ஆண்டு பிர்அவ்னின் சடலம் (மம்மி) கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி.1981 ஆம் ஆண்டு பேராசிரியர் மொரிஸ் பொகே யினுடைய தலைமையிலான பிரான்ஸிய ஆய்வாளர்கள் குழு நவீன கருவிகளால் மேற்கொன்ட பரிசோதனையின் முடிவில் பிர்அவ்ன் நீரில் மூழ்கியே மரணமானான் எனத் தெரியவந்தது. இறுதியில் மொரிஸ் பொகே இஸ்லாத்தை ஏற்றதோடு மிக முக்கியத்துவம் வாய்ந்த அவருடைய நூலான ”அல்குர்ஆன், தவ்ராத், இன்ஜீல், அறிவியல், நவீன விஞ்ஞான ஒழியில் பரிசுத்த வேதங்கள் ஓர் ஆய்வு” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அது மட்டு மன்றி அல்குர்ஆனில் இது தவிர்ந்த பல துறைகளுடன் தொடர்புபட்ட அற்புதங்கள் மறைந்து காணப்படுகின்றன. [சூறா அற்றூம்: 1-3 ]முதல் வசனம் தொடக்கம் மூன்று வரையுள்ள வசனங்களை நோக்குவோம். இவற்றில் இரு அற்புதங்கள் பொதிந்துள்ளன. முதலாவது: பாரசீகர்களிடம் தோல்வியுற்ற ரோமர்கள் மீண்டும் அவர்களை சில (பில்உ) வருடங்களில் (அறபியில் பில்உ என்ற பதம் ஒன்றிட்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்டதை குறிக்கும்) வெற்றி கொள்ளல். அல்குர்ஆன் வாக்களித்த இவ்விடயம் ஏழு வருடங்களின் பின்னரே நிரூபனமானது. கி.பி.627 ம் ஆண்டு பாரசீகருக்கும் ரோமருக்கும் இடம் பெற்ற யுத்தத்தில் ரோமர்கள் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது அற்புதம்: அக்காலத்தில் எவ்வழியிலும் அறிந்திருக்க முடியாத புவியியல் உண்மையை பற்றி குறிப்பிட்டுள்ளது. அதாவது; யுத்தம் புவியின் மிக தாழ்ந்த பிரதேசத்திலே நடைபெற்றது. அரேபியில் “அத்னா” என்ற பதம் மிக நெருங்கிய, தாழ்ந்த என்ற இரு அர்த்தங்களை குறிக்கும். இவ்விரு அர்த்தங்களும் சரியான கருத்தையே தருகின்றன. முதல் அர்த்தத்தின் படி (மிக நெருக்கமான) யுத்தம் அரேபிய தீபகத்திற்கு மிக அன்மிய பிரேதசத்திலே நடைபெற்றது. இரண்டாம் (மிகத் தாழ்ந்த) அர்த்தத்தின் படி செயற்கை கோள்களால் மிக வரண்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட, கடல் மட்டத்திலிருந்து 400 மீற்றர் தாழ்வில் அமைந்துள்ள புவியின் மிக தாழ்ந்த பிரதேசத்திலே திகழ்ந்தது. செங்கடலை அன்டியுள்ள புவியின் மிக தாழ்ந்த பிரதேசத்தில் நிகழ்ந்ததாக வரலாறு சான்று பகர்கிறது.

மைக்கல்: றாஷித்! இவை போதுமென நினைக்கிறேன்.

ரஜீவ்: ஆனால் நான் மேலும் அறிய ஆவாலாக உள்ளேன். புவியியல், வானியல் போன்ற வேறு துறைகளையும் பற்றி அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா?

றாஷித்: ஆம், வாணியல் மாத்திரமல்ல பிரபஞ்சம், மனித உருவாக்கம், வேதியல், ,தாவரவியல், விலங்கியல், ,உடலியல், ஒளியியல், வரலாறு, கணிதவியல் என அறிவியல் துறைகளுடன் இலக்கண, இலக்கிய துறைகள் பற்றியும் அல்குர்ஆன் உரையாற்றுகிறது.

மைக்கல்: நாங்கள் பேச வேண்டிய தலைப்புகள் ஏற்றமானதாக உள்ளன. என்றாலும் எங்கள் நண்பர் ரஜீவை விட்டும் பிரிவதை நிணைத்தால் சற்று கவலையாகயுள்ளது. ரஜீவ் நாளை நாம் புறப்படவுள்ளோம்.

றஜீவ்: நீங்கள் பிரிந்து செல்வதால், மிக கவலையாகவுள்ளது. உங்களை சந்தித்தில் மகிழ்ச்சியாகயுள்ளது அத்தோடு உங்களுடைய உரையாடலும் அதிகம் பிரயோசனமளித்தன. எங்கள் தொடர்புகளை இனையத்தள பக்கம் ஊடாக மேற்கொள்ளலாம் .

றாஷித்: நல்ல யோசனை. சரி ஓர் நல்ல நினைவிற்காக இப்பொருத்தமான நேரத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தால் என்ன?.

மைக்கல், ரஜீவ்: ஆம், நல்ல யோசனை...

Tags:
 அல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.