நம்பிக்கையின் அவசியம்

 நம்பிக்கையின் அவசியம்

112

நம்பிக்கையின் அவசியம்

நம்பிக்கையின் அவசியம்

நண்பர்கள் மூவரும் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து கொண்டனர் றாஷித் மைக்கல் இருவரும் உணவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு தங்களுக்குத் தேவையானதை வேண்டிக்கொண்டனர் ரஜீவ் உணவு ப்பட்டியலை நன்றாக அவதானிரத்து கொண்டே:

அதிகமான உணவகங்கள் சைய உணவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. அப்படியிருக்க எப்படி எனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுப்பது?

மைக்கல்: அப்படியானால் நீங்கள் சைவ உண்ணியா?.

ரஜீவ்: ஆம், இந்திய குடிமக்களில் 40% வீதமானோர் சைவ உண்ணிகளே.

றாஷித்: ஏன் அவ்வாறு, மார்க்க காரணிகளா அல்லது சுகாதார காரணீகளா?

ரஜீவ்: நான் இந்து மதத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். அதில் மாட்டை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்துமதக் கோட்பாட்டில் சைவக்கோட்பாடு இந்தியாவில் மிகப்பரவலான ஒன்று. ஆனால், அக்கோட்பாடு படிப்படியாகக் குறைந்து கொன்டே வருகிறது. என்னை பொருத்த மட்டில் சுகாதார காரணிக்காக சைவ உணவையே விரும்புகிறேன்.

சிற்றூழியறை அழைத்தவராக றாஷித்: தயது செய்து, இவை எங்களுக்கு வேண்டியவை.

மைக்கல்: சரி ரஜீவ், எதற்காக உங்களுடைய மதத்தை விட்டீர்கள்.?

ரஜீவ்: ஏனெனில் ஜேர்மனில் நான் கற்கும் கல்வி இந்து மதம் தொடர்பான எனது கோட்பாடை விமர்சனத்துக்குள்ளாக்கி விட்டது நான் கிருஸ்தவ மதத்தை தழுவவுமில்லை. அதனால் நான் நாஸ்திக வாதத்திற்கு நெருக்கமானவன் எனலாம்.

மைக்கல்: நான் அதில் உங்களை விட மிக நெருக்கமானவன். என்றாலும், மனிதன் சில நேரங்களில் கடவுலோடு தொடர்புபட்டிருப்பது நல்லதென கருதுகிறேன். ஆனால், அத்தொடர்பு மனிதனை கட்டுப்படுத்தாமல் இருக்கவேண்டும்.

றாஷித்: எனவே இது சம்பந்தமான உரையாடினால் நல்லதென நினைக்கிறேன்.

மைக்கல்: எது சம்பந்தமாக?

றாஷித்: நாஸ்திகமும் மற்றும் மனித வாழ்க்கையில் கடவுளின் முக்கியத்துவமும்..

ரஜீவ்: மனிதனின் விஞ்ஞான முன்னேற்றம் அவன் அறிந்திராத பல இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை விளங்காமல் இருந்தவற்றை இதற்குப்பிறகு விளங்கவேண்டிய தேவை அவனுக்கு இல்லை என கருதுகிறேன். அத்தோடு இப்பிரபஞ்சம் விஞ்ஞான கோட்பாட்டினால் அமையப்பெற்றது என நம்புகிறேன். இன்னொரு முறையில் கூறினால், இப்பிரபஞ்சம் தவிர்க்கமுடியாத சில நியதிகளுக்கு உட்பட்ட இயந்திரக்கருவியாகும். அதில் நிகழக்கூடிய அனைத்திற்கும் தவிர்க்க முடியாத காரணிகள் உள்ளன. பிரபஞ்சத்தை இயந்திரக் கோட்பாடுகள் அவற்றின் விதிமுறைகளுக்கேற்ப இயக்கும் காலமெல்லாம் அதை ஆளும் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்ற சிந்தனைக்கு இடமில்லை.

றாஷித்: விஞ்ஞானம் சூழ உள்ளவற்றை விளக்கும் மிகச்சிறந்த கருவி. எனினும் இங்கே எழுந்துள்ள பிரச்சினை அதுவல்ல. இதுபோன்ற பெரிய பிரச்சினைகளை இங்கு கலந்தாலோசிக்கவும் முடியாது. என்றாலும் ஆரம்பகால தொடக்கம் இருந்து வரக்கூடிய பல பரிமாணங்களைப் பெற்ற சிக்கல்களில் ஒன்றுதான்:

விஞ்ஞானம் எங்களை சூழவுள்ள அனைத்தையும் விளக்குகின்றதா? நிச்சயமாக இல்லை. அது சாத்தியமற்ற ஒன்று. உதாரணமாக நாம் வானிலையை எடுத்துகொண்டால்; இன்றுவரை நாங்கள் கண்டுபிடித்தது வெறும் 5% வீதம் மட்டுமே. ஏனையவை நாங்கள் அறியாத இருள். தற்போது அவர்கள்(விஞ்ஞானிகள்) அறிந்திருக்கும் சாத்தியப்பாடுகள் இவ்வளுவுதான் என்றால், அவர்கள் அறியாத விடயங்கள் எவ்வளுவோ உள்ளன. ஆனால் அவர்கள் கண்டுபிடித்தவை 5% மாக இருப்பினும் நாங்கள் அவற்றை நம்புகிறோம்.

புலனுறுப்புகளுக்கு தென்படுபவற்றை மாத்திரம் அறியக்கூடிய மனிதனிடத்தில் இந்நிலைப்பாடு என்றால், மறைவானவற்றை அறியக்கூடிய இறைவனிடம் எங்களது நிலைப்பாடு என்ன?

இது எங்களை நாங்களாகவே கேள்வி கேற்கக் கூடிய நிலைக்குத் தள்ளுகிறது அறிவு எல்லைகள் அற்றதா என்பதை எவ்வளவுதான் ஆய்வுசெய்தாலும், அது வரையறுக்கபட்டது என்பதை அறிய கடமைப்பட்டுள்ளோம். எனவே மறைவானவற்றை அறிந்த ஒருவனுக்கு ஒன்றைபற்றி அறிய வேண்டிய அவசியம் இல்லை. விஞ்ஞானத்தால் விளக்கமுடியாத உடலியற்தொழிற்பாடுகள் பல இருகின்றன. அவ்வாறாயின் புலனுறுப்புக்களாலும், ஆய்வு மையங்களாலும் கண்டுபிடிக்க முடியாத தீர்க்கதரிசனமுடையவனை விஞ்ஞானத்தால் எவ்வாறு விளக்கமுடியும்?! .

அவ்வாறே, நாம் ஒன்றின் உருவாக்கத்தை அறிவதால் அதை உருவாக்கியவனை மறுக்கவோ அல்லது அவனது படைப்பாற்றலை குறைத்து மதிப்பிடவோ முடியாது. உதாரணமாக ஒருவர் தொலைக்காட்சி உபகரணத்தைப் பார்த்து பிரம்மித்துவிட்டார்; பின்னர் அதன் தொழிற்பாடுகளையும், உருவாக்கிய முறையையும் நன்கு அறிந்து கொண்டார். இதனால், அவர் அதை முதலில் உருவாக்கியவனை மறுக்கிறார் என்றோ அல்லது உருவாக்க அவன் மேற்கொண்ட முயற்சியை குறைத்து மதிப்பிடுகிறார் என்றோ அர்த்தமல்ல. இவ்வாறுதான் உயிரங்கிகள் தொடர்பாண ஆய்வில் அவற்றின் உயிரணுக்களிள் உள்ள செல்களை பிளவுபடுத்தி நுண்ணிய மரபனுக்களை பரிசோதித்து அவற்றில் மறைந்திருக்கும் அதிசயங்களை காண்கிறோம். இதனால், அவற்றில் அற்புதங்கள் இல்லை என்றோ அல்லது அவற்றை உருவாக்கிய படைப்பாளன் இல்லை என்றோ ஆகிவிடுமா?! அவ்வாறல்ல, ஒன்றை எவ்வித மூலக்காரணியும் இன்றி படைப்பதற்கோ அல்லது அதற்கான முறையை கண்டறிவதற்கோ வழிதெறியாது பிரம்மித்து போயிருக்கும் மனிதனின் நிலை இப்படைப்பினங்களுக்கு பின்னால் ஒரு சிருஷ்டிப்பாளன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை வலியுறுத்துகிறது.

இன்னொரு உதாரணம்: அமெரிக்காவின் உயிரியல் பெராசிரியர் சிசில் பேஸ் ஹாமான் குறிப்பிடுகையில்:

உணவு உடலை எவ்வாறு சென்றடைகின்றது (உடலின் ஒரு பகுதியாக மாறுகிறது) தொடர்பான திடுக்கிடச் செய்யும் தகவல் அல்லாஹ்வின் பக்கம் என்னை நெருங்கவைக்கிறது. அன்றைய தினம் உடலின் இரசாயன எதிர்விளைவுகளை பார்வையிடலானேன். அல்லாஹ் இருக்கிறான் என்பதை அது பொய்பிக்கிறதா? அப்படியென்றால் அவ்விரசாயனப் பதார்த்தங்களை மிகக் கட்சிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றியமைக்கும் சக்தி எது?! உணவு மனித உடலினுல் சென்ற பின் முறையான பல கட்டங்களை கடந்து செல்கிறது. திகிழவைக்கும் இவ்வொழுங்குமுறை தூய மிகநுண்ணிய ஒருமைப்பாட்டினால் அமையப்பெற்றிருக்க வேண்டும். அவற்றை பார்த்த பிறகுதான், மனித வாழ்க்கைக்கென வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த விதிமுறைக்கேற்ப அல்லாஹ்வே அவற்றை செயற்படுத்துகிறான் என நம்பலானேன்.” எனக்கூறினார்.

மைக்கல்: இக்கருத்தை டாவின்சியின் பரிணாம கோட்பாடும் உறுதிபடுத்துகிறது; உயிரனங்கள் அனைத்தும் இயற்கை தேர்மானக்கோட்பாட்டின் அடிப்படையில் பரிணாமம் அடைந்ததே ஒழிய படைப்பினங்களல்ல என்பதை உறுதிபடுத்துகிறது.

றாஷித்: இக்குறிப்பு சம்பந்தமாக மிக முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. அதாவது; அறிவியல் வியாக்கியானம் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக உள்ளதா? விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஒன்றினைந்து பழைய கோட்பாடுகளை மீள்ப் பரிசீலனை செய்து, புதிய கோட்பாடுகளை உருவாக்கி உலகத்திற்கு அவற்றை தெரியப்படுத்துகின்றன அறிவியல் முன்னேற்றத்தின் மிக முக்கிய கருவிகளாக விளங்ககூடியவை அறிவியல் குவிப்பு மற்றும் எழுச்சிகளுக்கான அடையாளங்களே என்பதை விஞ்ஞான முன்னேற்றத்தை கண்டுவியப்பவர்களிள் அதிகமானோர் மறந்துவிடுகின்றனர்.

டார்வினுடைய கொள்கையை பொருத்தமட்டில் அது ஓர் விஞ்ஞான உண்மையோ அல்லது கோட்பாடோ அல்ல, மாறாக இன்றைய நவீன அறிவியலோடு முரண்படுகிறது. இவ்வாறே கேம்ரிய வெடிப்பு கொள்கையில் கேம்ரிய யுகங்கள் என்று கூறப்படும் அவ்விரு காலப்பகுதியில் பெரிய விலங்குகள் திடீரென தோற்றம் பெற்றன என நம்பப்பட்டது. காலப்போக்கில் அக்கொள்கையும் மாற்றமடைந்தது.

ரஜீவ்: அப்படியென்றாள் எந்த சிரிஷ்டிப்பாளனும் இல்லாமல் இவ்வுலகம் திடீரென தானாக தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

றாஷித்: ஒரு நிகழ்வு திடீரென ஏற்படுவதற்கு எந்தளவு சாத்தியப்படும் என்பதை விளக்க எனக்கு அனுமதிதாருங்கள்:

ஆயிறக்கான நெடுங்கனக்கு எழுத்துக்களை கொண்ட ஒரு பெரிய பெட்டி எங்களிடம் உள்ளது, என வைத்துக் கொள்ளுங்கள்; அவற்றில் A மற்றும் AM ஆகிய இரண்டையும் பெறுவதற்கான நிகழ்தகவு அதிமாக இருக்கும். ஆனால் அவ்வெழுத்துக்களால் நீண்ட கவிதையொன்றையோ அல்லது கதையொன்றையோ எழுதுவதென்பது சாத்தியமற்றது.

அனுச்செறிவால் அமிலோ அமிலத்தின் தசைகளிலும் ,புரதங்களிலும் உள்நுழையும் மிகமுக்கிய மூலப்பொருளின் ஒரு பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் அதற்கு பல மில்லியன் ஆண்டுகள் தேவைபடுவதோடு முழு பிரபஞ்சமும் தாக்குபிடிக்க முடியாத ஒரு மூலப் பொருளும் தேவைப்படுகிறது. இச்சிறு அற்பமான பகுதியை உருவாக்கவே இவ்வளவு கடினமாக இருப்பின் இவ்வலகில் வாழும் அனைத்து உயிரனங்களும் திடீரென தானாக உருவாக எவ்வாறு சாத்தியப்படும்! கனவிலும் சாத்தியப்படாத ஒன்று.

இப்பிரபஞ்சம் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்க முடியாத அற்புதம் செறிந்த மிக நுண்ணிய ஒழுங்கமைப்பை கொண்டிருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் உறுதிபடுத்துகிறது. அதேநேரம் சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழ்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்வு கூறக்கூடிய அளவு இன்றைய விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.

இப்பிரபஞ்ச நியதிகளை விதியாக்கி அவற்றை வலுவாக வடிவமைத்தது மட்டுமல்லாமல் எவ்வித மூலப்பொருளும்மின்றி அதை ஆரம்பத்தில் உருவாக்கியவன் யார்?! அவற்றுக்கிடையில் இவ்வொழுங்கமைப்பை சிருஷ்டித்தவன் யார்?! அவற்றை ஒவ்வொன்றாக செதுக்கி வடிவமைத்து அழகுபடுத்தியவன் யார்?! இவையனைத்தும் படைப்பாளனின்றி தானாக உருவானவையா?! அல்லது மனிதர்கள் தானாகவே அவர்களை படைத்து கொள்கிறார்களா?! முஸ்லிம்களுடைய வேதநூலான திருக்குர்ஆன் இவ்வாறு வினவுகிறது {அல்லது அவர்கள் எப்பொருளுமின்றி தானாக படைக்கப்பட்டு விட்டனரா அல்லது அவர்கள் (தாங்களாகவே) படைக்கின்றார்களா} [அத்தூர்: 35]

இப்பிரபஞ்சம் பயனிக்கும் நியதியானது அதை தீர்க்கமாக சிருஸ்டித்த இறைவனொருவன் இருக்கிறான் என்பதை காண்பிக்கிறது.

மைக்கல்: எனினும் அங்கே இன்னொரு கேள்வி எழுவதை காணலாம். அதாவது: மதம் ஏன் அவசியம்? ஏன் நாங்கள் கடவுளை நம்ப வேண்டும்? அதிகமானோர் கடவுள் ,மத நம்பிக்கையற்றவர்களாகத்தானே வாழ்கிறார்கள்?

றாஷித்: மனிதவியல், இறையியல் ஆய்வுகள் உறுதிபடுத்துவது யாதெனில்: மனித சமுதாயத்தின் எல்லா காலகட்டத்திலும் மதம் அவசியமான ஒன்றாக காணப்பட்டது. மனிதன் ஆதிகாலம் தொட்டே அவன் வணங்கக்கூடிய கடவுளை தேடுபவனாகவும் அவனிடம் மன்றாடுபவனாகவும் இருந்துவருகிறான் அத்தோடு இப்பிரபஞ்சத்தை ஆளும் சர்வ வல்லமைமிக்கவன் அனைத்தையும் படைத்த நித்திய ஜீவன் ஒருவனே என நம்புகிறான்.

மனித இயல்பு சான்றுபகர்வது யாதெனில்: ஒருவருக்கு கஷ்டமோ,ஆபத்தோ,சுமையோ ஏற்படுகின்றவேளை அவனுடைய உயிறியல் தேவை அல்லாஹ்வை நம்புமாறு அவனைத் தூண்டுகிறது.

இந்நம்பிக்கை இல்லாத ஒருவன் மனோஇச்சைகளுக்கு அடிபணிந்த (இருதயமற்ற) மிருகமாக மாறுகிறான்.

ரஜீவ்: பெரியார் றாஷித் அவர்களே! சற்று மன்னிக்கவும், பல்வேறுபட்ட மதங்களைக் கொன்ட நாட்டில் வாழ்ந்தேன்; பின்னர் ஐரோப்பாவிற்கு வந்து பல மதங்களை சார்ந்த நண்பர்களுடன் அறிமுகமானேன். (அல்லாஹ்) இறைவன் பற்றிய அவர்கள் ஒவ்வொருவடைய கருத்துக்களும் வித்தியாசப்படுகின்றன. அவற்றை எவ்வாறு நான் விளங்குவது? உண்மையான இறைவன் பெற்றிருக்கக்கூடிய பண்புகளை எவ்வாறு அறிந்துகொள்வது? அதேபோன்று.. சத்திய மார்கத்தை அறிந்து கொள்வது எப்படி.?

றாஷித்: ஆம் சிற்றூழியர் உணவு கொன்டுவந்து விட்டார். இது தொடர்பாக எங்களுடைய அடுத்த சந்திப்பில் கலந்துறையாடலாம். அத்தோடு “மதம் இல்லாத அறிவியல் ஊனமானது; அறிவியல் இல்லாத மதம் குருடானது” என்ற இயற்பியல் அறிஞர் அல்பிரட் ஐன்ஸ்டைனுடைய கூற்றுக்கு முதலில் உடன்படுவோம்.

Tags:
Saad Al Ghamdi - Quran Downloads