நாகரீகப்போர்வையில் பாரபட்சம்

 நாகரீகப்போர்வையில் பாரபட்சம்

430

நாகரீகப்போர்வையில் பாரபட்சம்

நாகரீகப்போர்வையில் பாரபட்சம்

இரண்டேகால் மணிநேர பிரயானத்தைத்தொடர்ந்து இரு நண்பர்களும் பிரான்சின் தலைநகர் பெரிசை வந்தடைந்ததும், ஒருவழியாக புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறினர். மைக்கலை பார்த்தால் அவருக்கும் பெரிசிற்கும் இடையில் பலத்த உறவு இருப்பதாகவே தெரிந்தது. ஆனால் றாஷிதோ அங்கு இதற்கு முன் சென்றது கிடையாது.

மைக்கல்: ராஷித் இதுதான் பிரான்ஸ் நன்றாகப்பாருங்கள்; இதை ஒரு கலங்கரைவிளக்கு என்று கூறினாலும் மிகையல்ல. ஏனென்று தெரியுமா? முழு உலகத்திற்கும் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவத்தை கற்றுக்கொடுத்ததே இதுதானே! அடிப்படை மனிதவுரிமைகூட இங்கிருந்துதான் அவர்களுக்குப்போய்சேர்ந்தது.

ராஷித்: மைக்கல் அங்கே பாருங்கள்! அந்தக்காவல்துறை அதிகாரி எந்தக்குற்றமோ புரியாத அந்தப்பெண்ணை போகவிடாமல் ஏன் தடுத்து நிறுத்தவேண்டும்?

மைக்கல்: அதுவா?அந்தப்பெண் முகத்திரையனிந்திருக்கிறாள் பிரான்சில் பொது இடங்களில் முகத்திரையனியத்தடை விதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னிருந்துதான் அச்சட்டம்அமுலுக்கு வந்தது. சட்டத்தை மீறியதால் அபராதம் விதிப்பதற்காக அவளை நிறுத்தியிருக்கலாம்.

றாஷித்: பொது இடங்களிலா!...? அப்படியென்றால் வீட்டில் மாத்திரம் நிகாப்(முகத்திரை) அணிய அனுமதி வழங்கி இருக்கிறது போலும் இந்தப்பொல்லாத சட்டம், பிரமாதம்.....இத்தோடு இஸ்லாமிய பெண்களுடிய சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்களே! பிரான்சில் மட்டுமல்ல, வடஇத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான். இதுபோன்ற சட்டங்களை விதித்து பெண்களின் உரிமையை முடக்க அயராமல் உழைக்கிறார்கள். இதற்கு ஸ்பெயின், ஒல்லாந்து போன்ற நாடுகளும் விதிவிலக்கல்ல அவுஸ்த்திரேலியாவில் நிகாப் அணிந்துவரும் பெண்களின் முகத்தை திறந்து பார்ப்பதற்கான முழு அதிகாரமும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மைக்கல்: என்னைப்பொருத்தமட்டில், இச்சட்டம் ஒரு பெண் தான்விரும்பிய ஆடையை அணிவதில் உள்ள தனிப்பட்ட சுதந்திரத்திற்கு தடையாகவுள்ளது. மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சட்டங்களைக்கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறு நிகழ்வது... பொருத்தமற்ற ஒன்றுதான்.

ஆனால் பிரான்சிய அரசு நிகாப் அணிவதை ஒரு மத அனுஷ்டானமாக பார்க்கிறது. அந்தடிப்படையில் மதச்சின்னங்களை பயன்படுத்துவது அவர்களுடைய மதச்சார்பற்ற கொள்கைக்கு முரணானதல்லவா? எனவே அதற்குத்தடைவிதிப்பதை அவர்கள் ஒரு அநியாயமாக நினைக்கவில்லை.

ராஷித்: ஹ்ம்ம்....அப்படியென்றால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் இந்தத்தடை; பாதிரியார் ஆடையணிந்த ஒருவருக்கோ அல்லது கழுத்தில் சிலுவை அடையாளத்தை மாட்டிக்கொண்டிருக்கும் ஒருவருக்கோ இப்படி செய்வார்களா? அடிமை முறை என்றால் அவர்களிடம் என்ன விளக்கமோ? ஆண்களின் இச்சையைத்தூண்டக்கூடிய அமைப்பில் ஒரு பெண்ணை அரைநிர்வாணமாக ஆடை அணியவைப்பது அடிமை முறையல்ல, ஆனால் அதே பெண் தன் விருப்பத்தின் பெயரால் அவளுடைய மேனியை மறைத்துக்கொண்டு சென்றால் அது அடிமை முறை? ஆம்... நிச்சயமாக அது அடிமை முறைதான் இறைவன் ஒருவனுக்கு மாத்திரம் உரித்தான...

பிராண்சியப்புரட்சியின் சுலோகத்திலுள்ள சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் மனிதனிடமிருந்து விடுபடுவதல்ல, மாறாக இறைவனிடமிருந்தும், அவனை வழிப்படுவதிலிருந்தும் விடுதலைப்பெருவதே என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். சுதந்திரம் யாருக்கு எப்படி வழக்க வேண்டுமென்ற அதிகாரம் இறைவனுக்கு மாத்திரம் உரியது. அதை கையிலெடுத்துள்ள மதச்சார்பற்ற அரசுகள் கொக்கரிக்கின்ற சுதந்திரத்தின் வியாக்கியானமல்லவா இது!..... ((உன் சுதந்திர முடிவில் பிறர் சுதந்திரம் தொடர்கிறது)) எனக்கூறிக்கொண்டிருந்தவர்கலல்லவா இவர்கள். பெண்களின் மேனியை பிறர் பார்ப்பதே சுதந்திரம், எனவே இஸ்லாமியப்பெண்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டுமென்றா நினைக்கிறார்கள்? நண்பரே இங்கு பிரச்சினை ஹிஜாபல்ல, இஸ்லாத்தின் மீதுள்ள ஐரோப்பாவின் பயம்...

மைக்கல்: தலைலர் றாஷித்! லிடயத்தை பூதாகரமாக்க வேண்டாம். ஐரோப்பாவிலுள்ள பெரம்பாலான முஸ்லிம்கள் சுதந்திரமாகவே வாழ்கிறார்கள்; ஏன், இன்னும் சிலர் அவர்களுடைய சொந்த நாடுகளில் கூட பெறமுடியாத சலுகைகளையெல்லாம் பெருகின்றனர்.

றாஷித்: நண்பரே! நான் ஒன்றும் பூதாகரமாக கூறவில்லை அதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

மைக்கல்: எந்த வகையில்.

றாஷித்: சுவிஸ்சர்லாந்தில் பள்ளிவாயல்களில் மிஃதனாக்கள் (கோபுரங்கள்) கட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது அதுவும் ஜெனிவா ஒப்பந்தங்கள் இடம்பெறக்கூடிய ஒரு நாட்டில் வெறும் நான்கே மிஃதனாக்கள்(கோபுரங்கள்) 4% முஸ்லிம்கள் உள்ள நாட்டில் மிஃதனாக்கள் கட்டுவதால் சமூகத்திற்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?! வேறொன்றுமல்ல இஸ்லாத்தின் மீதுள்ள பயம்...

மைக்கல்: என்னைப் பொருத்தவரை அத்தடையை ஆதரிக்கமாட்டேன். என்றாலும், மிஃதனாக்கல் (கோபுரங்கள்) அவர்களுடைய நாட்டு சட்டதிட்டங்களுக்கு முரணானவை என்று நினைக்கிறார்கள் போலும்.

றாஷித்: தேவாலய கோபுரங்கள், யூத வணக்கஸ்தளங்கள் என எத்தனை வழிபாட்டுச்சின்னங்கள் உள்ளன. இவையனைத்தையும் விட்டு விட்டு ஏன் இதை மட்டும் தடை செய்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்கையில் அவர்கள் கொக்கரிக்கும் சமத்துவம், மதச்சார்பற்ற கொள்கை முதலியவற்றின் உண்மையான அர்த்தம் நன்றாக புரிகிறது. அதுமட்டுமா இஸ்லாத்தின் அடையாளச்சின்னங்கள் அனைத்திலுமல்லவா கை வைக்கிறார்கள். இஸ்லாத்தின் தூதரும் அதற்கு விதிவிலக்கல்ல. அன்மையில் டென்மார்க் போன்ற நாடுகளில் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக வரையப்பட்ட கேலிச்சித்திரங்களைப் பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம்.

மைக்கல்: தலைவரே! அது கருத்துச்சுதந்திரம்; நம் நாட்டில் அதற்கு எந்தத்தடையுமில்லை. எத்தனையோ முறை இயேசு கிரிஸ்துவம் வேறு சில மதச்சின்னங்களும்

விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டன.

றாஷித்: அவ்வாறல்ல, தடையிருக்கிறது. கருத்துச்சுதந்திரத்திலோ, விஞ்ஞானஆய்விலோ அல்ல டென்மார்க் பத்திரிகைகள் இறைத்தூதர் கேலிச்சித்திரத்தை பிரசுரித்த வேலை அந்நோய் அண்டிய ஐரோப்பிய நாடுகளுக்கும் பறவியது. முஸ்லிம்கள் அனைவரையும் பாதித்த அச்செயலை மேற்கத்திய அரசுகள் சில ஆதரித்தன. கேட்டால் கருத்துச்சுதந்திரம் என்றார்கள். ஆனால், அதேநேரம் இவ்வசம்பாவிதத்திற்குப் பின்னனி யூதர்களே என்றமைப்பில் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக ஒல்லாந்து முஸ்லிம் பெண்கள் சிலருக்கு அவ்வரசு 2500 யூரோவை அபராதமாக விதித்தது.

பிரான்ஸிய சிந்தனையாளர் GAROUDY ஐரோப்பாவில் நாஜிகளால் அழிக்கப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையில் சந்தேகப்பட்டார். இதற்காக, 1998 ஆம் ஆண்டு பிரான்ஸிய நீதிமன்றம் அவர் யூத இன அழிப்பில் சந்தேகப்படுவதாக குற்றம் சுமத்தியது.

பிரித்தானிய வரலாற்றாசிரியர் DAVID IRVING யூத இன அழிப்பு தொடர்பாக சோடிக்கப்பட்ட தகவல்களை மறுத்தார். அதற்காக அவரை மூன்று வருட கால சிறை தண்டனை அனுபவிக்குமாறு 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நீதி மன்றம் உத்தரவிட்டது.

நாஜிகளால் அழிக்கப்பட்ட யூதர்கள் வெறும் இரண்டு லச்சத்திற்கும் மூன்று லச்சத்திற்கும் இடைப்பட்டவர்களே, என பகிரங்கமாக அறிவித்ததால் பிரித்தானிய கத்தோலிக்க கிரிஸ்தவ பாதரி Richard Williams க்கு 2009 ஆம் ஆண்டு ஜேர்மணிய நீதி மன்றம் பத்தாயிரம் யூரோவை அபராதமாக விதித்தது.

இவ்வாறு சுதந்திரத்திற்கு தடைவிதிக்கப்பட்டோர் பலர் உள்ளனர்.

மைக்கல்: வரலாற்றில் மிக நீண்ட காலமாக முஸிலிம்களுக்கும் கிறிஸ்கலர்களுக்கும் மத்தியில் பரஸ்பர பகைமை காணப்பட்டது. அதுமட்டுமன்றி அண்மைகாலமாகவும் இஸ்லாமிய கடும்போக்கு சிந்தனையால் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. இதனால் ஏனைய இந்து, பெளத்த மதங்களோடு ஒப்பிட முடியாதளவு ஒருவிதமான பயத்தை மக்கள் இஸ்லாத்தின் மீது கொண்டனர். இதற்குக்காரணமாக சில முஸ்லிம்களின் நடவடிக்கையுமிருந்தது. என்ன நினைவிருக்கிறதா?

றாஷித்: ஹா.. சரியான முறையில் உண்மையை விளக்க முற்படுவோம்; இதற்கு ஒரு வகையில் சில இஸ்லாமிய குழுக்களும் தனி நபர்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதே நேரம் இவ்விடயங்களின் யதார்த்த நிலையையும் கண்டரிய கடமைப்பட்டுள்ளோம். அச்சம்பவங்களைப் பயன்படுத்தி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது எதிர்ப்பை உண்டாக்கும் சில திட்டங்களும் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது

மைக்கல்: திட்டங்களா?.. என்ன திட்டங்கள்?!

றாஷித்: ம்.. அவற்றில் சிலதைக்கூறுகிறேன்.

ஐரோப்பா சில நோக்கங்களுக்காக அரேபியர் இடப்பெயர்விக்கு கதவைத் திறந்துகொடுத்தது. அவற்றில் மிக முக்கிய நோக்கம்; குடும்பக்கட்டமைப்பு சிதைவால் சனத்தொகையில் ஏற்பட்ட வீக்கத்தை ஈடு செய்வதாகும். இஸ்லாமிய போதனைகளை கடைபிடித்து வந்த பழைய சந்ததியினரை மாற்ற முடியாவிடிலும் மேற்கத்தய நாகரீகத்தில் பிறக்கக்கூடிய புதிய சந்ததியினரையாவது மேற்கத்திய கலாசாரத்திற்கேற்றாட்போல் மாற்றலாம் என என்னினர். இதனால் ஐம்பது வருடங்களின்பின்னர் மேற்குலகம் முழுவதும் ஒரே கலாச்சாரமாக காணப்படும் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால் அதற்கு மாற்றமாக, இஸ்லாமிய உலகில் ஆரம்பித்த அதன் எழுச்சி மேற்குலகுவரை பரவியதை அவர்கள் அவதானித்தனர். அவர்கள் வைத்த தடைக்கல் படிக்கல்லாக மாறியது. இஸ்லாமிய குடும்பத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகள் அதன் போதனைகளை தொடர்ந்தும் கடைபிடித்தே வந்தனர். இதுவே அவர்களின் இரண்டறக் கலப்புத்திட்டம் தோல்வியுறக் காரணமாக அமைந்தது.

அச்சந்த்தியினர் மேற்கத்திய நாகரீகத்திற்கு பெரும் அச்சுருத்தலாக மாறினர். இதனால் மேற்குலகு உண்மையான ஒரு சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியது.

அந்தடிப்படையில் இவ்வினவாத பிரச்சாரங்களுக்கெள்ளாம் பிரதான காரணி மேற்கத்திய தனித்துவம் இழந்துவிடுமோ என்ற அவர்களின் காழ்ப்புணர்வே. இதை இவ்வாறு விட்டு விட்டால் இஸ்லாத்தில் எஞ்சியுள்ள ஒழுங்கு முறைகளும் ஐரோப்பாவை ஊடுறுவி விடும், எனவே அதை முலையிலே கில்லியெரியும் நடவடிக்கையாக இஸ்லாமிய சின்னங்களை ஒவ்வோன்றாக கொச்சைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். தற்போது நாகரீக மோதல் இஸ்லாத்திற்கெதிராக மாறிவிட்டது. இதையே அமெரிக்க சிந்தனையாளர் SAMUEL HANGLAN “நாகரீகமோதல்” எனக்குறிப்பிட்டார்.

மைக்கல்: உணவகத்தை வந்தடைந்துவிட்டோம். இது தொடர்பாக கலந்துரையாட பல சந்திப்புகள் தேவை.!

Tags:
Yasser Al-Qurashi - Quran Downloads