வானத்தின் பிரகாசம் (தூதுத்துவத்தின் அவசியம்)

 வானத்தின் பிரகாசம் (தூதுத்துவத்தின் அவசியம்)

64

வானத்தின் பிரகாசம் (தூதுத்துவத்தின் அவசியம்)

வானத்தின் பிரகாசம் (தூதுத்துவத்தின் அவசியம்)

வாலிபர்கள் தங்கியுள்ள அவ்வில்லத்தின் கேட்போர்கூடத்தை றாஷித் நுழைந்தபோது கூடத்தில் உயரமாக மாட்டிவைக்கப்படைடிருந்த விளக்கை வட்டமேசை ஒன்றிலிருந்து உற்றுநோக்கியவராக மைக்கலை கண்டுகொண்டார். றாஷித் அவரை நோக்கி வந்தனம் தெரிவிக்கவே மைக்கல் விழித்து கொன்டார். உடனே கதிரையை அவர்பக்கம் இழுத்தவறாக:

நீங்கள் ஏதோ முக்கியமான ஒன்றில் ஈடுபட்டுக் கொன்டிருப்பதைபோன்று தோன்றுகிறது. நானும் பங்குபற்றலாமா.

மைக்கல்: ஓ.. மண்ணிக்கவும், நீங்கள் இருப்பதை கவனிக்கவில்லை.

அப்போ ரஜீவ் வரவில்லையா?

றாஷித்: இன்னும் ஐந்து நிமிடங்கள் உள்ளன.

அதோ! வருகிறார்.

ரஜீவ்: நண்பவர்களே என்னுடைய வந்தனம், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

றாஷித்: நாங்களும் அவ்வாறே...

மைக்கல்: உண்மையிலே இவ்வாறு பயனுள்ள உரையாடல்கள் என்னை மகிழ்ச்சியூட்டுகின்றன. நீங்கள் இருவரும் வருவதற்கு முன்னர் முக்கியமான ஒரு விடயத்தை ஆழமாக சிந்தித்துக் கொன்டிருந்தேன். உங்கள் இருவருடனும் அதைப்பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த எங்களுடைய விவாதத்துடன் தொடர்புபட்ட ஒன்று. எங்களை படைத்த இறைவனை நாம் கட்டாயம் வணங்கவேண்டுமெனின் அவனை அறிந்து கொள்வதற்கான வழிமுறையை எங்களுக்கு காட்டவேண்டுமல்லவா? எனவே இவ்வாறு எங்களை விட்டுவிடுவது எந்த விதத்தில் நியாயம்?!

ரஜீவ்: உங்களிடம் வருவதற்கு முன்னர் நானும் இதைப் பற்றிதான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

றாஷித்: மிக அருமையான கேள்வி, அல்லாஹ் மனிதனை மிக அழகிய வடிவில் சிருஷ்டித்தான். பூமியிலுள்ள அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளதோடு, வானத்திலுருந்தும் நலவுகளை இறக்கியருளுகிறான். இவ்வாறு பிரபஞ்சத்தை உருவாக்கி, அதில் மனிதனை படைத்து, இவ்வருட்கொடைகளை எவ்விதநோக்கமுமின்றி அவனுக்கு அருளியுள்ளான் என்றால் அது நியாயமற்ற ஒனறு.

மைக்கல்: பிரம்மாதம், சரியான புள்ளிக்கு வந்துவிட்டோம். அப்படியென்றால் இப்பிரபஞ்சத்தையும், மனிதனையும் படைத்து அருட்கொடைகளை வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

ரஜீவ்: சென்ற விவாதத்தில் உண்மையான கடவுளின் பண்புகள் தொடர்பாக கலந்துரையாடியதற்கும், இதற்குமிடையில் ஒரு தொடர்பிருக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால், இறைவன் என்பவன் படைபினங்களுக்கு முன்னரானவன். என்றாலும்.. எப்படி கூறுவதென்றுதான் தெரியவில்லை.

றாஷித்: ரஜீவ்! நீங்கள் கூறுவது சரி, நான் அதை ஒரு உதாரணத்தோடு தொடர்படுத்தி விளக்குகிறேன். எடுத்துக்காட்டாக: நீங்கள் ஒன்றை விரும்பினால் அதை அடைய ஆசைப்படுவிர்கள். அப்படித்தானே?

ரஜீவ்: ஆம்

றாஷித்: அப்படியென்றால், அதையடைய விடாமல் உங்களை தடுப்பது எது?

ரஜீவ்: தற்போது... எனக்கு தோன்றியிருக்கும் காரணம்: அதை அடைய சக்தி பெற்றிருக்க்கூடாதா.

றாஷித்: அப்படியென்றால் நீங்கள் சக்தி பெற்றால் அதை அடைவீர்கள். அதே விடயம் தான் இதற்கும்.

மைக்கல்: உங்கள் உதாரணம் மேலும் குழப்பமாக இருக்கிறது.

றாஷித்: நீங்கள் கூறுவது உண்மைதான். எனினும் பூரனமாக கூறிமுடிக்கிறேன். சென்ற எங்களூடைய உரையாடலின் போது இறைவனுக்கென அழகிய பண்புகள் இருக்கின்றன, என்ற விடயத்தில் உடண்பட்டோம். அவை அல்லாஹ்வும் அவனுடைய படைப்பினங்களும் விரும்பக்கூடிய பண்புகளாகும். படைப்பாளன் சர்வ வல்லமை படைத்தவன்; சர்வலோக மன்னன் முதலியன அவற்றில் சிலவாகும். இப்பண்புகளை விரும்புவது அவற்றை அமுல்படுத்துவதை கட்டாயபடுத்துகிறது.

அல்லாஹ் சர்வ வல்லமை படைத்தவன். இதனால் அவன் நாடியவற்றை தடுக்க யாராலும் முடியாது. அதே சமயம் படைப்பாளன் என்பதனாலேயே படைப்பினங்களை சிருஷ்டிக்கிறான்; படைப்பதை விரும்புகிறான். அருள்பாழிப்பவன் என்பதால் அருள் பொழியதை விரும்புகிறான். இரக்கமானவன் என்பதால் இரக்கம் காட்டுவதை விரும்புகிறான் அவ்வாறே அவன் ஆற்றல் படைத்தவன்; நினைத்ததை முடிப்பவன்; அவனை யாருலும் தடுக்கமுடியாது.

மைக்கல்: சரி, இது தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு என்ன?!

றாஷித்: எங்களுடைய நிலைப்பாடு என்னவெனின்:நாம் அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்காகவும், அனைத்து குறைகளைவிட்டும் அவனை தூய்மைபடுத்துவதற்காகவும் எங்களை படைத்துள்ளான். இவ்வருட்கொடைகளை வழங்கியிருப்பது புசிப்பதற்காக மாத்திரமல்ல, மாறாக நன்றிசெலுத்துவதற்காகவுமே. ,அதற்காக நன்றி செலுத்துவதையும், போற்றுவதையும் அவன் விரும்புகிறான். எனவே இவைகள் அவனை மாத்திரம் வணங்கவேண்டும் என்பதை வழியுறுத்துகின்றன. ஏனெனில் படைப்பவனும், பரிபாலிப்பவனும், வணக்கத்திற்கு தகுதியானவனும் அவன் ஒருவனே.

ரஜீவ்: நீங்கள் கூறியவற்றில் இரு முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் முதலாவது: வணக்கம், நண்றிசெலுத்துதல், புகழ்தல் என அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக வணக்கஸ்தலத்திலேயே அமர்ந்திருக்க வேண்டுமா?

றாஷித்: இல்லை, இல்லை, நான் அதை நாடவில்லை. அல்லாஹ்வை வணங்குவது தொடர்பாக நீங்கள் எண்ணிய அர்த்தம் மிகக் குறுகியது. நான் பின்பற்றும் இஸ்லாம் இதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்விற்கு வழிபடுதல் என்பது பூமியை பரிபாலித்தல், மனித நாகரீகத்தைக் கட்டியெழுப்புதல் என வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது.

மைக்கல்: ஆனால் மார்க்கத்தை பின்பற்றாமலேயே இவற்றை (நாகரீகத்தை கட்டியெழுப்புதல், பூமியை பரிபாலித்தல்) புரிகிறோமே.

றாஷித்: இதனாலேயே அப்படியான நாகரீகத்தின் விளைவுகள் தடுமாற்றம், பீதி, சமூகப் பிளவு, பிறருக்கு அநியாயம் இழைத்தல் என மிக மோசமாக இருப்பதை காண்கிறோம். இந்நிலை மனித பரிமானத்தை தனிமைப்படுத்தி கண்டுபிடிப்புகளுக்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் மாத்திரம் முக்கியத்துவம் செலுத்த கூடிய நிலைக்கு இட்டுச்செல்லும். மனித மூலக்கூறுகளில் ஆன்மீகக்கூறு மிக முக்கியமான ஒன்றாகும். எனவே மனிதனுடைய நாகரீக செயற்பாடுகள் இறைவனுடன் தொடர்புபட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் அனைத்து பக்கங்களும் மனிதாபிமானதாக இருப்பதோடு, இப்பிரபஞ்ச நியதிகளுக்கு ஒத்துபோகக்கூடியதாக அமையும். ஏனெனில் மனிதனின் நலவு, கெடுதிகளை நன்கறிந்தவன் இறைவன் ஒருவனே.

மைக்கல்: அப்படியென்றால் பொறியியலாளர் ரஜீவ் அவருடைய வேளையை கட்சிதமாக புரிய வேதநூட்களை பின்பற்ற வேண்டுமா?... அது எப்படி?! எங்களுடைய வாழ்க்கை சீராக அமைய வேண்டுமென்பதற்காக அல்லாஹ் விரும்பியவற்றை எவ்வாறு கடைப்பிடிப்பது?.

றாசஷித்: இவ்வுலக நடவடிக்கைகள், அறிவியட் கலைகள் ஆகியவற்றிலும் மார்க்கம் தலையிடவேண்டும் எனக் கூறவில்லை. மாறாக ஒரு மனிதன் சமூகத்துடன் எவ்வாறு பழக வேண்டும், சமூகங்களுடனான தொடர்பு எவ்வாறு அமைய வேண்டும், மனிதனுக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் இடையிலான தொடர்புகள், மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான தொடர்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பன பற்றிய கோட்பாடுகளை இஸ்லாம் வகுத்துள்ளதைப் போன்று, மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பண்பாட்டு ஒழுங்குமுறைகளையும் வழங்கியுள்ளது.

தெளிவுபடுத்துவதற்காக ஒரு உதாரணத்தை கூறுகிறேன்: அல்லாஹ் எங்களையும், பூமியையும், வானத்தையும், அதிலுள்ளவற்றையும் படைத்திருக்கிறான். மேகத்திலிருந்து மழையை பொழியவைத்து பூமியில் எங்களுக்காக உணவுகளை முளைக்கச்செய்கிறான். அத்தோடு தீங்கிளைக்கும் தாவரங்களையும் முளைக்கசெய்கிறான். அது மட்டுமன்றி அவற்றில் பயன்தரக்கூடிய தாவரங்கள், மருந்து மூளிகைகள் முதலியவற்றை கண்டறிவதற்கான ஆற்றலையும் நுட்பத்தையும் நமக்கருளியுள்ளான். நமக்கும், பிறருக்கும் தீங்கிழைக்கக்கூடிய அனைத்தும் தடைசெய்யபட்டவை என்ற சட்டத்தையும் பிறப்பித்துள்ளான்.

இன்னொரு எடுத்துகாட்டு: நீதியை நிலைநாட்டல், மெருகூட்டலை வெறுத்தல் போன்றவற்றில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். எனினும் அவற்றை ஆழச்சென்றுபார்போமாயின் பல வேறுபாடுகளை காணலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவர் நலன்களை கருத்திற்கொன்டு செயற்படுவதனால் அவைகளின் நோக்கமும் வேறுபடும். ஆகவே மனித சமூகத்தை ஆளும் அதிகாரம் கொன்ட, அனைவரையும் பக்கசார்பின்றி சரிநிகராக நோக்கக்கூடிய ஒருவன் தேவை.

அல்லாஹ் பொருந்தக்கூடியவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது தொடர்பானவை அல்லாஹ்வின் பண்புகளான “அரசன்”,”அதிநுட்பமானவன்” என்பவற்றோடு தொடர்புபட்டவை. சென்ற உரையாடலில் அல்லாஹ் இப்பிரபஞ்சத்தை ஒரு நோக்கத்திற்காக படைத்துள்ளான் எனப் பார்த்தோம். எடுத்துக்காட்டாக: பல கட்டிடங்களை கட்டி, பல வேலையாட்களை உத்தியோகங்களிள் அமர்த்தி, கருவிகளை உபயோகித்து உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்து, அவற்றை சந்தை படுத்தகூடிய நிறுவனம் எவ்வித நோக்கமோ நிறுவாகமோ இன்றி இயங்கிறது என்பதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா!!

மைக்கல்: நிச்சயமாக இல்லை.

றாஷித்: அப்படியென்றால், இப்பிரபஞ்சம், அதிலுள்ள படைப்பினங்கள் தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன? எனவேதான் அல்லாஹ் மனிதசமுதாயத்தின் வழிகாட்டியாக வேதநூட்களையும் அவற்றையும், அவனையும்பற்றி தெளிவுபடுத்துவதற்காக தூதர்களையும் அனுப்பிவைத்தான்.

மனிதன் நன்மை, தீமை ஆகியவற்றை நோக்கி ஈர்க்கக்கூடிய இரு இயக்கங்களுக்கு மத்தியில் தள்ளாடுபவன். ஆகையால் அவனுக்கு ஓர் இறைவழிகாட்டி (தூதுவத்துவம்) அவசியமாகும். தூதுவத்துவம் மென்பது பூமியிலுள்ள அடியார்களுக்கு நன்மை, தீமைகளை தெளிவுபடுத்துவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட பிரகாசமாகும்.

தூதுவத்துவம் தீங்கிளைக்கூடியவை, பயனுள்ளவை ஆகியவற்றுக்கிடையிலுள்ள பாகுபாட்டினை தெளிவுபடுத்துவதை நோக்காகக் கொண்டதல்ல. ஏனெனில் அது ஐந்துதறிவு படைத்த மிருகங்களாலும் முடியுமான ஒன்று. எடுத்துகாட்டாக ஒரு கழுதையால் மன்னுக்கும், கோதுமைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை கண்டறிய முடியும். ஆனால் தூதுத்துவத்தின் நோக்கம் வேறுபட்டது. இம்மையிலும், மறுமையிலும் நன்மை, தீமைகளை ஈட்டிதரக்கூடிய செயல்களை வேறுபடுத்திக் காட்டுவதே அதன் நோக்கமாகும். தூதுவத்துவம் மாத்திரம் இல்லையெனில், ஒரு மனிதனால் அவனுடைய வாழ்க்கையிலுள்ள நன்மை, தீமைகளை பிரித்தறியமுடியாது.

ரஜீவ்: சரி, இரண்டாவது விடயம்: மனிதர்கள் இறைவனை வழிப்படுவதில் ஒருவரையொருவர் வித்தியாசப்படுகின்றனர். ஆனால் அவனுடைய அருள்களை அனுபவிப்பதில் எவ்வாறு சமமாவார்கள்?!

றாஷித்: ஆம், அது அவர்களுக்கான சோதனையே ஒழிய (அவர்களுக்கு வழங்கப்படும்) கூலியில் அவர்கள் சமனாக மாட்டார்கள். கூலியின் அடிப்படை எங்களுக்கு வழிகாட்டகூடிய தூதர்களிள் இறைச்செய்தியில் (ரிஸாலத்) தங்கியுள்ளது.

மைக்கல்: மூன்றாவது விடயம்: மனிதர்களில் அநியாயக்காரன், பொய்யன், ஏமாற்றுகாரன் என பல பிரிவினர் இருக்கின்றனர் அப்படியிருக்க (அல்லாஹ்வின்)அருட்கொடைகளை அனைவரும் எவ்வாறு அனுபவிப்பார்கள், சில குற்றவாளிகள் சமூகதண்டனையிலிருந்து தப்பிச்செல்லலாமே?!

றாஷித்: ஆம், இதுவும் ஓர் சோதனைக்காகத்தான். அவர்கள் இவ்வுலகில் தண்டனையிலிருந்து தப்பிச்செல்லலாம், ஆனால் கேள்விகள் கேட்கப்பட்டு கூலிவழங்கப்படும் நியாயத்தீர்ப்பு நாளில் இறைவனுடைய தண்டனையிலுந்து தப்பிக்கமுடியாது. அந்நாளில் மனிதனுடைய நல்ல,தீய செயல்களுக்கு கூலி வழங்கப்படும்; தீர்ப்பு மிக உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்கும்.

என்றாலும் மனித சமுதாயம் சிறந்த அடிப்படையையொட்டி நடக்க ஒரு மூலாதாரம் அவசியமாகும். இதில் அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்ட ரிஸாலத் (இறைசெய்தி)களின் பங்களிப்பு இன்றியமையாதது. அத்தூதர்கள் மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படைகளையும், அவற்றைமீறுவதால் ஏற்படும் விளைவுகளையும், மறுமையில் நமக்காக காத்துக்கொன்டிருக்கும் இன்பதுன்பங்களையும் (சுவர்க்க,நரகத்தையும்) நியாயத்தீர்ப்பு நாளில் நடைபெற விருக்கின்றவற்றையும் அறிவிப்பார்.

ரஜீவ்: தலைவர் றாஷித்! தூய மார்க்கத்தின் பண்புகள் தொடர்பாக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவேன்டுமென கூறியது ஞாபகம் இருக்கிறதா?.

றாஷித்: ஆம், நன்றாக ஞாபகம் இருக்கிறது.

ரஜீவ்: ஆனால் அதை ஆரம்பிப்பதற்கு தற்போது நேரம்போதாது என நினைக்கிறேன்.

மைக்கல்: ஆம் ரஜீவ், இத்தலைப்பை எங்களுடைய அடுத்து உரையாடலில் பார்க்கலாம் .

Tags:
Mustafa Raad Al Azzawi - Quran Downloads