அல்லாஹ் நுட்பமானவன்....

 அல்லாஹ் நுட்பமானவன்....

38

அல்லாஹ் நுட்பமானவன்....

நிச்சியமாக அல்லாஹ் நுட்பமானவன்....

{என் இறைவன் நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்;}

[ஸூரது யூசூப் 100]

மென்மையானவன்

ஒரு படைப்பினத்தை அவனுடைய மென்மையாலும் இரக்கத்தாலும் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான்.

மென்மையானவன்

கொடைகளையும், மகத்துவமான நேர்வழியையும் நல்லவைகளையும் அல்லாஹ் கூலியாக கொடுக்ககூடியவன்.

மென்மையானவன்

அவனுடைய அடியார்களிடத்தில் அவன் மென்மையானவன்.

{அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன்.}.

[ஸூரது ஏஷ்ஷூரா 19]

அல்லாஹ் அவர்களுக்கு மார்க்கத்திற்கும் உலகத்திற்கும் தேவையான நலவுகளை கொடுக்கின்றான். மேலும் அவர்களை விட்டும் உலகத்திலும் மார்க்கத்திலும் தீங்கு விளைவிக்கக்கூடியதை தடுக்கின்றான்

மென்மையானவன்

அவன் கண்களுக்கு எட்டமாட்டான் ஆனால் அவன் பார்த்துக் கொண்டருக்கின்றான்.

{அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்} [ஸூரதுல் அன்ஆம் 103]

மென்மையானவன்

மறைமுகமான விடயங்களை அவன் அறிந்தவன். செயல்களை நிமிடங்களுக்கு ஏற்ப அவன் கணக்கிடுகின்றான். பகலிலோ இரவிலோ அவனுக்கு எதுவும் மறையாது. அவனுடைய அடியார்களின் நலவுகளை நிமிடங்களுக்கு ஏற்ப கண்ணியமான முறையில் அறிந்து கொண்டு இருக்கிறான். அவர்களை மென்மையாக்குகின்றான்.

மென்மையானவன்

ஒரு விடயத்தை நிர்னயித்து விட்டால் அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு அதிலே இரக்கம் காட்டுகின்றான். மேலும் அவன் ஒரு விடயத்தை நிர்ணயித்தால் அவர்களுக்கு உதவுகின்றான். கடுமையான விடயங்களை மூடி விட்டால் அவனுக்கு வெற்றியின் பாதையை திறந்து கொடுக்கின்றான். மேலும் அவன் ஒரு விடயத்தை கஷ்டப்படுத்தினால் அதை இலேசாக்கி கொடுக்கின்றான்.

நிச்சியமாக அல்லாஹ் மென்மையானவன்....

மென்மையானவன்... அவனுடைய அறிவு இரகசியங்களையும் மறைவான விடயங்களையும் சூழ்ந்துள்ளது. மறைவான விடயங்கள் அனைத்தும் நிமிடத்திற்கு நிமிடம் அவனை அடைகின்றது. அவன் அவனுடைய அடியார்களாகிய முஃமீன்களுடன் மென்மையானவனாக இருக்கின்றான். அவர்கள் உணராத விதத்தில் அவனுடைய மென்மையின் அழகின் மூலம் அவர்களுடைய நலவுகளை அடைந்து கொள்வார்கள்.
Tags:
Mustafa Raad Al Azzawi - Quran Downloads